தி.மு.க. தலைவர் கருணாநிதி, புள்ளி விவரம் என்ற பெயரில், அலங்கோல கணக்குகளை அள்ளித்தெளித்து, தனது கட்சிக்கு ஆதாயம் அளித்த கூட்டணிக் கட்சியினரையே அவமானப்படுத்தி, தனது பிறவிக்குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்

May 25 2016 7:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நடந்து முடிந்த 15-வது சட்ட மன்றப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பின்னர், 2 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அடுத்தடுத்து அமோக வெற்றிபெற்று, மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளார் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா. இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, புள்ளி விவரம் என்ற பெயரில், அலங்கோல கணக்குகளை அள்ளித்தெளித்து, தனது கட்சிக்கு ஆதாயம் அளித்த கூட்டணிக் கட்சியினரையே அவமானப்படுத்தி, தனது பிறவிக்குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க., தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில், முதன்முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களம் கண்டது. ஆனால், தி.மு.க.வோ, பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் தேர்தலில் போட்டியிட்டது. 180 தொகுதிகளில் தி.மு.க.வும், 54 இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. 134 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுகின்ற கட்சியே, தொடர்ந்து ஆட்சியில் அமரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, தங்கள் கட்சி தோல்விக்கு கூட்டணிக் கட்சிகள்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு தி.மு.க.வின் சில ஆதரவு நாளேடுகளை துணைக்கு அழைத்துக் கொண்டு, புள்ளி விவர ஆதாரம் என்ற பெயரில், தனது பிறவிக்குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் கருணாநிதி. கூட்டணிக் கட்சிகள் தவறாக கருதிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டுவிட்டு, முற்றிலும் அவர்கள் மீது பழி சுமத்தி இருக்கிறார்.

கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளே இல்லாமல்தான் தி.மு.க.வினர், எம்.எல்.ஏ.க்களாக வந்துள்ளார்களா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மாயாஜால புள்ளி விவரங்களை கருணாநிதி அள்ளிவிடுவது பொருத்தமா? என்ற கேள்விகள், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு மட்டுமல்ல, அனைவரது மனதிலும் எழுகின்றன.

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், அதிலும், தி.மு.க. சின்னத்திலேயே போட்டியிட்ட கூட்டணி கட்சிகளை இழிவாகக் கருதி, தி.மு.க.வின் சின்னத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவையும் கருணாநிதி அவமானப்படுத்தியிருப்பதாக தி.மு.க. கூட்டணிக் கட்சி வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு கிடைத்த தொகுதிகளைக் கணக்கிட்டு, இந்தத் தொகுதிகள் தனியே தி.மு.க.வுக்கு கிடைத்ததுபோலவும், தி.மு.க. தோல்வியடைந்த தொகுதிகள், கூட்டணிக்கட்சிகளின் தொகுதிகள் என்பது போலவும், ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க கருணாநிதி முயற்சித்திருக்கிறார் என்பது, அவரது அறிக்கை மூலம் தெளிவாகிறது - அப்படியானால், தி.மு.க.வுக்கு கிடைத்துள்ள தொகுதிகளில், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லையா? கூட்டணிக் கட்சிகளின் வாக்கு இல்லாமலேயே தி.மு.க. அந்தத் தொகுதிகளை பிடித்துள்ளதா?

தேர்தல் நடந்து முடிந்த 232 தொகுதிகளில், அ.இ.அ.தி.மு.க. பெற்ற வாக்கு சதவீதம் 40 புள்ளி 8. ஆனால், தி.மு.க.வினர் வாங்கிய வாக்கு சதவீதமோ 31 புள்ளி 6. அதாவது, தி.மு.க.வைவிட, 9 புள்ளி 2 சதவீத வாக்குகள் அ.இ.அ.தி.மு.க. கூடுதலாகப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக அ.இ.அ.தி.மு.க. பெற்ற வாக்குகள், ஒரு கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 60. தி.மு.க. வாங்கிய வாக்குகள் ஒரு கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 511. இது, தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள உண்மையான புள்ளி விவரம்.

ஜனநாயக நெறிமுறைப்படி, தேர்தலில் அதிகமான வாக்குகளையும் பெற்று, அதிக இடங்களிலும் வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. ஜனநாயக மரபுப்படி, ஆட்சி அமைத்துள்ளது. இதனை சகித்துக்கொள்ள முடியாத கருணாநிதி, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத குழப்பமான புள்ளிவிபரங்களை அள்ளித் தெளித்து, தனது தோல்வியை மூடி மறைக்க முயற்சிக்கிறார். மக்களின் தீர்ப்பை ஏற்க மனமில்லாமல், இப்படியெல்லாம் குளறுபடியான தகவல்களை கருணாநிதி வெளியிடுவதைப் பார்க்கும்போது, அவர் இன்னும் திருந்தவில்லை - திருந்தப்போவதும் இல்லை - தன் பிறவிக்குணத்தை கருணாநிதி விடப்போவதும் இல்லை என்பது தெளிவாகிறது என நடுநிலையான அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00