தமிழக அரசின் மிகச்சிறப்பான நடவடிக்கையால் புத்துயிர் பெற்ற திருப்பூர் பனியன் தொழில் - ஏற்றுமதி பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதால் உற்பத்தியாளர்கள் உற்சாகம்

May 4 2016 10:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூரில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மிகக்கடுமையான வீழ்ச்சியை சந்தித்த பனியன் தொழில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மிக அபாரமான நிர்வாகத் திறமையால் தற்போது புத்துயிர் பெற்று மாபெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில் பனியன் ஏற்றுமதி அளவு 23 ஆயிரம் கோடிரூபாயை தாண்டியிருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பனியன் ஏற்றுமதியில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது திருப்பூர் மாநகரம். உலகளாவிய தொழில் வரைபடத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றி வருகிறது திருப்பூர். இங்கு சுமார் ஆயிரத்து 500 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு பனியன் தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னையாலும், தொடர் மின்வெட்டு மற்றும் விலை ஏற்றத்தாலும் பனியன் தொழில் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றபோது இந்த நிலைமை தலைகீழாக மாறியது.

பனியன் தொழிலில் மோசமான நிலையை அறிந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்திற்கு வட்டியில்லா கடனாக 200 கோடி ரூபாய் வழங்கி, பனியன் தொழிலின் வீழ்ச்சிப் பாதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் பலனாக கடந்த 2012-ம் ஆண்டில் 12,500 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி மதிப்பு, தற்போது 23,500 கோடி ரூபாய் என்ற இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது. அகில இந்திய அளவில் 10 சதவீத ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும், வேலைவாய்ப்பு வழங்குவதிலும் தேசிய அளவில் திருப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இத்தனை பெருமையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை சாரும் என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் பனியன் உற்பத்தியாளர்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00