முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் பெருமளவில் பயன்பெற்ற தமிழகத்தின் அனைத்து தரப்பினரும், அ.இ.அ.தி.மு.க.வுக்கு பேராதரவு : முதலமைச்சரின் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் வரலாறு காணாத எழுச்சி - நாளுக்கு நாள் பெருகிவரும் செல்வாக்கால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம் அமோக வெற்றிபெறும் - அரசியல் பார்வையாளர்கள் கருத்து

May 4 2016 6:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் பெருமளவில் பயன்பெற்ற தமிழகத்தின் அனைத்து தரப்பினரும், வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு பேராதரவு தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், பொதுமக்களிடையே வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு நாளுக்கு நாள் பெருகிவரும் செல்வாக்கால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம் அமோக வெற்றிபெறும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்விஜெ ஜெயலலிதா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்துடனும், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி என்ற லட்சிய முழக்கத்துடனும், தமது தேர்தல் பிரச்சாரத்தை, சென்னையில், கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கினார்.

சென்னையைத் தொடர்ந்து, விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி, மதுரை, விழுப்புரம், கோவை ஆகிய இடங்களில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களில், லட்சோபலட்சம் பொதுமக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா எழுச்சிப் பேருரையாற்றி அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார். முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம், லட்சக்கணக்கான பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் திரண்டு நின்று, "அம்மா வாழ்க" என்ற வாழ்த்தொலி எட்டுத்திக்கும் எதிரொலிக்க, மகிழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி - குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் - ஏழை, எளியோருக்கு பசுமை வீடுகள் - கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் - இல்லத்தரசிகளுக்கு விலையில்லா, மிக்ஸி, கிரண்டர், மின்விசிறி - மணப்பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வரை திருமண நிதியுதவி - மகப்பேறு நிதியுதவி மற்றும் 6 மாத பேறுகால விடுமுறை - முதியோர் உதவித்தொகை - மாணவ-மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், அனைத்து வகை கல்வி உபகரணங்கள் - விலையில்லா மடிக்கணினிகள் - மிகக் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு - உழவர் பாதுகாப்புத் திட்டம் - தமிழகம் முழுவதும் சாலை மேம்பாடு, புதிய பாலங்கள், புதிய பேருந்துகள் - சீரமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு - முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்தை, ஒளிமயமாக்கி வரலாற்றுச் சாதனை - மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் - அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், பண்ணை பசுமைக் காய்கறி விற்பனை நிலையங்கள் - மீனவ மக்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் என, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் பெருமளவில் பயன்பெற்றுள்ள தமிழக மக்கள், வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கே தங்கள் வாக்கு என, முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் உறுதிபடத் தெரிவித்து தங்கள் பேராதரவை அளித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00