சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, பெருந்துறையில் நாளை தேர்தல் பிரச்சாரம் : பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டுகிறார் - முதலமைச்சரை வரவேற்கவும், பேருரையைக் கேட்கவும், பொதுமக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் பேரார்வம்

May 4 2016 6:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டுகிறார். முதலமைச்சரை வரவேற்கவும், அவரது எழுச்சியுரையைக் கேட்கவும், பொதுமக்களும், கழகத் தொண்டர்களும், மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்துடனும், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி என்ற முழக்கத்துடனும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் எழுச்சிப் பேருரையாற்றி, கழக வேட்பாளர்களுக்கு பேராதரவு திரட்டி வருகிறார்.

சென்னையில் கடந்த 9-ம் தேதி, தமது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தொடர்ந்து, விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி, மதுரை, விழுப்புரம், கோவை ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில், லட்சோபலட்சம் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுச்சியுரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், எழுச்சிப் பேருரையாற்றுகிறார்.

இக்கூட்டத்தில், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, அவினாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம், காங்கேயம், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டுகிறார்.

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை வரவேற்கவும், அவரது எழுச்சியுரையைக் கேட்கவும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00