தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம் - முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துரைத்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

May 4 2016 6:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வரலாற்றுச் சாதனைகளையும், எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, இரட்டை இலை சின்னத்திற்கு பேராதரவு திரட்டி வருகின்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா போட்டியிடும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், கழக நிர்வாகிகள் நாள்தோறும் தீவிர வாக்குசேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், நேதாஜி நகரில் நேற்று தமிழ்நாடு வஃக்பு வாரியத்தலைவர் திரு. அ.தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், முதலமைச்சரின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

இதேபோல், கொருக்குப்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழக நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் தொகுதி கழக வேட்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆலந்தூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன், ஆலந்தூரில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அவரை ஆதரித்து கழக பேச்சாளர் திரு. பாரிஸ் ராஜா, முதலமைச்சரின் சாதனை விளக்கி கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட சரஸ்வதி நகர், ராஜா சண்முகம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக வேட்பாளர் திரு. B.பால்ராஜ், கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

பூந்தமல்லி தொகுதி கழக வேட்பாளர் திரு. T.A.ஏழுமலை, கரையான்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட கம்பன் நகர், அசிசி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கழக வேட்பாளர் திரு. D. தட்சிணாமூர்த்தி, வீதிவீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

சங்கராபுரம் தொகுதி கழக வேட்பாளர் திரு. ப.மோகன், கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரங்கநாதபுரம், அரியபெருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை தொகுதி கழக வேட்பாளர் திரு. இரா.குமரகுரு, கழக நிர்வாகிகளுடன் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர், ஆனத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி தொகுதி கழக வேட்பாளர் திரு. ஆர்.வேலுவை ஆதரித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கெடார் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

செஞ்சி தொகுதி கழக வேட்பாளர் திரு. அ.கோவிந்தசாமியை ஆதரித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பீரங்கிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம் தொகுதியில், திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீரனூர், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழக வேட்பாளர் திரு. கதிர் தண்டபாணி, கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்லை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

கள்ளக்குறிச்சி தொகுதி கழக வேட்பாளர் திரு. பிரபு, கழக நிர்வாகிகளுடன் தியாகதுருவம் பேரூராட்சிக்குட்பட்ட பீரங்கிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட மேல்பட்டாம்பாக்கம், அண்ணா கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கழக வேட்பாளர் திருமதி. சத்யா பன்னீர்செல்வம், கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

காட்டுமன்னார்கோவில் தொகுதி கழக வேட்பாளர் திரு. நா.முருகுமாறனை ஆதரித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.அருண்மொழிதேவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கல்லடி குட்டை, வீரனாந்தபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குன்னம் தொகுதி கழக வேட்பாளர் திரு. R.T.ராமச்சந்திரன், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட வயலப்பாடி, ஓலைப்பாடி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், வேப்பந்தட்டை, பிரம்மதேசம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாநகரம், குறிச்சிநத்தம், வெங்கடகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கழக வேட்பாளர் திரு. தாமரை எஸ். ராஜேந்திரன் வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மன்னார்குடி தொகுதி கழக வேட்பாளர் திரு. எஸ். காமராஜ், கழக நிர்வாகிகளுடன் பொதக்குடியில் இஸ்லாமியர்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதுடன், அத்திக்கடை, அதங்குடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம், இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

கும்பகோணம் தொகுதி கழக வேட்பாளர் திருமதி. ரத்னாசேகரை ஆதரித்து கும்பகோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை ஆதினம், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு வாக்குசேகரித்தார்.

கோபிசெட்டிபாளையம் தொகுதி கழக வேட்பாளர் திரு. கே.ஏ.செங்கோட்டையன், கழக நிர்வாகிகளுடன் பூதிமடைபுதூர், கோபிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

வந்தவாசி தொகுதி, தெள்ளார் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொரக்கொட்டை, கடம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கழக வேட்பாளர் திரு. வி.மேகநாதன் வீதிவீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. கே.செல்வமணி, விருதுவிளங்கினான், காடகமான், வெறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் தொகுதி கழக வேட்பாளர் திரு. திண்டுக்கல் சி. சீனிவாசனை ஆதரித்து, அண்ணா போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், சந்தைரோடு, போடிநாயக்கன்பட்டி, திருமலைசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

வேடசந்தூர் தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் பரமசிவம், நல்லமானார் கோட்டை, கொத்தனம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

நிலக்கோட்டை தொகுதி கழக வேட்பாளர் திரு. ஆர்.தங்கதுரையை ஆதரித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.உதயகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ராயப்பன்பட்டியில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது சுட்டிகாளாடிபட்டி தி.மு.க. கிளைச் செயலாளர் திரு. அய்யனார் உள்ளிட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர், அக்கட்சியில் இருந்து விலகி, அ.இ.அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மதுரை மேற்கு தொகுதி கழக வேட்பாளர் திரு. செல்லூர் கே.ராஜு, ஜீவா நகர், ராமையா தெரு, சோலை அழகுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரை மத்திய தொகுதி கழக வேட்பாளர் திரு. ஜெயபால், தத்தனேரி, விசாலாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

சோழவந்தான் தொகுதி கழக வேட்பாளர் திரு. மாணிக்கம், திருவேங்கடம், முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கழக வேட்பாளர் திரு. பி.பழனியப்பன், பொம்மிடி,பைலரநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

அரூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஆர்.ஆர்.முருகன், எம்.தொட்டம்பட்டி, மருதிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

இராஜபாளையம் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஷ்யாம் ராஜாவை ஆதரித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் சொக்கனாபுத்தூர், கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினர்.

திருச்சுழி தொகுதி கழக வேட்பாளர் திரு. தினேஷ் பாபு, மறைகுளம், சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி கழக வேட்பாளர் சந்திர பிரபா, கழக நிர்வாகிகளுடன் வன்னியம்பட்டி, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

திருவைகுண்டம் தொகுதி கழக வேட்பாளர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், முதலூர், பண்டாரபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி தொகுதி கழக வேட்பாளர் திரு. சி.த.செல்லபாண்டியன், கழக நிர்வாகிகளுடன் கிருஷ்ணராஜபுரம், பூபால்ராயர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

ஒட்டபிடாரம் தொகுதி கழக வேட்பாளர் திரு. சுந்தர்ராஜ், அத்திமரப்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி தொகுதி கழக வேட்பாளர் திரு. என்.தளவாய் சுந்தரம், புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

குளச்சல் தொகுதி கழக வேட்பாளர் திரு. கே.டி.பச்சைமால், திங்கள் நகர், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

நாகர்கோயில் தொகுதி கழக வேட்பாளர் திரு. நாஞ்சில் முருகேசன், கிருஷ்ணன்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

போடிநாயக்கனூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம், அணைக்கரைபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

ஆண்டிபட்டி தொகுதி கழக வேட்பாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு, தேவதானப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.

நெல்லை தொகுதி கழக வேட்பாளர் திரு. நயினார் நாகேந்திரன், மானூர், ரஸ்தா உள்ளிட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

அம்பாசமுத்திரம் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஆர். முருகைபாண்டியன், வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.

சங்கரன்கோவில் தொகுதி கழக வேட்பாளர் திருமதி. ராஜலட்சுமி, நாயக்கர்பட்டி, கீழநாலத்துலா உள்ளிட்ட இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வசந்தி முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளானோர் உடனிருந்தனர்.

பாளையங்கோட்டை தொகுதி கழக வேட்பாளர் திரு. எஸ்.கே.ஏ. ஹைதர்அலி, 27-வது வார்டு பகுதியில் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். முத்துக்கருப்பன், திருமதி விஜிலா சத்யானந்த், மேயர் திருமதி புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. கே. மனோகரன், தாந்தோணி, குமாரமங்கலம், ராமையகவுண்டன்புதூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வன்னிமேடு, தென்றல் நகர், காந்தி நகர், சத்யா நகர், வி.சி.மோட்டூர் உள்ளிட்ட இடங்களில், கழக வேட்பாளர் திரு. சுமைதாங்கி சி. ஏழுமலை, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கழக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார்.

காட்பாடி தொகுதி கழக வேட்பாளர் திரு. எஸ்.ஆர்.கே. அப்பு, காட்பாடி ரயில் நிலைய பணியாளர்கள் குடியிருப்பு, பவானி நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார்.

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. சு. ரவி, அசோக் நகர், காமராஜ் நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு, வசந்தநடை, செதுவாலை, பொய்கை, இறைவன்காடு உள்ளிட்ட பகுதிகளில் கழக வேட்பாளர் திரு. ம. கலையரசு, வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

கே.வி. குப்பம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. ஜி. லோகநாதன், தொகுதிக்கு உட்பட்ட வடுகதங்கல் உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர் திரு. எஸ்.என். ஹாரூன்ரஹீத், வசந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆதரவு திரட்டினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.

இதனிடையே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ராஜ்பவன் தொகுதி கழக வேட்பாளர் திரு. கண்ணன், சின்னையாபுரம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.



நட்சத்திர பிரச்சாரம்

தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஏழை-எளிய மக்களின் நலனுக்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் எண்ணிலடங்கா நலத்திட்டங்கள் மற்றும் வரலாற்று சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00