தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குப்பதிவு மையங்களில் ஆண்கள், பெண்கள், முதியோர், கர்ப்பிணி உள்ளிட்டோருக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

May 2 2016 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குப்பதிவு மையங்களில் ஆண்கள், பெண்கள், முதியோர், கர்ப்பிணி உள்ளிட்டோருக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு.ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு.ராஜேஷ் லக்கானி, வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படும் என தெரிவித்தார். குறிப்பாக, வாக்களிக்க வரும் ஆண்கள், பெண்கள், முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுதிறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும் என கூறினார். நடிகர், நடிகைகளுக்கு தனி வரிசைக்கிடையாது என்றும், பொதுவரிசையில் நின்றுதான் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் 66 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கூறிய திரு.லக்கானி, தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படையினர் நாளை சென்னை வரவிருப்பதாகவும் குறிப்பிட்டார். பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றி அறிந்துகொள்ள, 1950 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என திரு.லக்கானி மேலும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00