அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம் : கடந்த 5 ஆண்டுகளில் 568 கோடி ரூபாய் அளவுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டு சாதனை - வருங்காலத்திலும் தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக மென்மேலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் உறுதி

May 2 2016 6:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெயலலிதா, தொழில்நகரமாம் கோயம்புத்தூரில் நேற்று மாலை நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றினார். அலைகடலென திரண்டிருந்த லட்சோபலட்சம் பொதுமக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களிடையே, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார். கோயம்புத்தூரில், வழிநெடுகிலும், சாலையின் இரு மருங்கிலும் லட்சக்கணக்கான மக்களும், கழகத் தொண்டர்களும், இரட்டை இலைச் சின்னங்களோடும், கழகக் கொடிகளோடும் திரண்டுநின்று, முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ. ஜெயலலிதா, நேற்று மாலை, கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றியபோது, உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகுக்கு எடுத்துரைக்கும் மே தின நன்னாளில், தொழிலாளர்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட்டது - கடந்த 5 ஆண்டுகளில் 568 கோடி ரூபாய் நல உதவிகள் வழங்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார். வருங்காலத்திலும் தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக மென்மேலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றவில்லை - முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், நாள்தோறும் 10 மணிநேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு காரணமாக, தொழில்கள் முடங்கின - லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து தவித்தனர் - விவசாயம் ஸ்தம்பித்தது - மாணாக்கர்களால் படிக்கமுடியவில்லை என முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 2011ம் ஆண்டு, தமது தலைமையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், தாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளால், 7 ஆயிரத்து 486 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெறப்பட்டு, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டது - மின்வெட்டு அறவே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு, தமிழகம் ஒளிமயமானது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார். ஊழலையே தொழிலாகக் கொண்ட தி.மு.க. காங்கிரஸ் கொள்ளைக் கூட்டணி ஓட்டுகேட்டு வரும்போது, விரட்டியடிக்கவேண்டும் என்று கோயம்புத்தூரில் திரண்டிருந்த லட்சோப லட்சம் மக்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00