முதலமைச்சர் ஜெயலலிதா, தொழில்நகரமாம் கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரை : லட்சோபலட்சம் பொதுமக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களிடையே, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார் - வழிநெடுகிலும், சாலையின் இரு மருங்கிலும் லட்சக்கணக்கான மக்களும், கழகத் தொண்டர்களும், இரட்டை இலைச் சின்னங்களோடும், கழகக் கொடிகளோடும் திரண்டுநின்று, முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு

May 2 2016 6:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்விஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தில், கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார். முன்னதாககோயம்புத்தூர் வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அலைகடலென லட்சக்கணக்கில் திரண்டிருந்த, பொதுமக்களும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்துடனும், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி என்ற லட்சிய முழக்கத்துடனும், தமது தேர்தல் பிரச்சாரத்தை, சென்னையில், கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கினார்.

சென்னையைத் தொடர்ந்து, விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி, மதுரை, விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களில், லட்சோபலட்சம் பொதுமக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களிடையே முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா எழுச்சிப் பேருரையாற்றி அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார்.

சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தின் அடுத்தகட்டமாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கோயம்புத்தூரில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேருரையாற்றினார்.

முன்னதாக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, Binny சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, விமான நிலையப் பகுதி உள்ளிட்ட இடங்களில் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று, வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூருக்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானநிலையத்தில், அமைச்சர் திரு. S.P. வேலுமணி, கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P.R.G. அருண்குமார், நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K.R. அர்ஜுனன் M.P., தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் திரு. பொள்ளாச்சி ஜெயராமன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. A.P. நாகராஜன் ஆகியோர் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு மலர்க்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து, விமான நிலைய வாயிலில் இருந்து, பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்ற கொடிசியா மைதானம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு, நூற்றுக்கணக்கான வரவேற்பு வளைவுகள் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான மக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் திரு.சின்னசாமி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் கரங்களில் கொடிகளை ஏந்தியபடி, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 6 கிலோமீட்டர் தூரமும், சாலையின் இருமருங்கிலும், சற்றும் இடைவெளியின்றி, லட்சக்கணக்கான பொதுமக்களும், கழகத்தொண்டர்களும், அண்ணா தொழிற்சங்கத்தினரும் திரண்டுநின்று, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

ஆயிரக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவ - மாணவிகள், உற்சாகத்துடன் சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று, "புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என முழக்கமிட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் பூரண கும்பங்களை ஏந்தி, முதலமைச்சருக்கு மகிழ்ச்சிபொங்க வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, பொதுக்கூட்ட மேடை பகுதியின் இரு மருங்கிலும், கழகக் கொடித் தோரணங்கள், வாழைமரத் தோரணங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், கழகக் கொடிகளையும், வரவேற்புப் பதாகைகளையும், இரட்டை இலைச் சின்னங்களையும் தங்கள் கைகளில் ஏந்தியவண்ணம், "புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என்று விண்ணதிர முழக்கமிட்டு, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை மகிழ்ச்சிபொங்க வரவேற்றனர்.

செண்டைமேளங்கள், பேண்ட் வாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள் முழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செல்லும் வழியில், நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு, பூரண கும்ப மரியாதை அளித்தனர். பொதுக்கூட்ட மேடையருகே, ஈச்சனாரி அருள்மிகு ஸ்ரீ விநாயகர் திருக்கோவில், பேரூர் அருள்மிகு ஸ்ரீபட்டீஸ்வரர் திருக்கோவில், மருதமலை அருள்மிகு ஸ்ரீசுப்ரமண்யர் திருக்கோவில், உக்கடம் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோவில், கோவை அருள்மிகு ஸ்ரீகோனியம்மன் திருக்கோவில், சித்தாபுதூர் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களின் சார்பிலும், ஈஷா ஃபவுண்டேசன் சார்பிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு வருகைதந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அங்கு திரண்டிருந்த லட்சோபலட்சம் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் "அம்மா வாழ்க" என்ற வாழ்த்தொலி முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிக்க எழுச்சிமிகு வரவேற்பளித்தனர்.

பொதுக்கூட்டத் திடலில், லட்சக்கணக்கில் அலைகடலென திரண்டிருந்த பொதுமக்களையும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களையும் பார்த்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தமது விரல்களை உயர்த்திக் காண்பித்து, அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்து, அ.இ.அ.தி.மு.க.வை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.

பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், லட்சக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும், மிகுந்த உற்சாகத்தோடும், எழுச்சியோடும், "புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என, விண்ணதிர வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, "எங்கள் வாக்கு இரட்டை இலைச் சின்னத்திற்கே" என்று உறுதியளித்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர்.

இந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரமன்ற முன்னாள் தலைவருமான திரு.S. குருமூர்த்தி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.K. மணிகண்டன், நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் திரு.S. பாலகங்காதரன், நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் திரு. R. சீனிவாசன், நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா இளைஞரணிச் செயலாளர் திரு.S. நிவாஸ், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான திரு.S.R. ராஜகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் திரு.H. தாராஃ ஷபி, இந்திய தேசிய காங்கிரஸின் கோவை மாவட்ட துணைத் தலைவரும், ஆலாந்துறை பேரூராட்சி மன்றத் தலைவருமான திரு.M. மணிகண்டன் வெங்கடகிருஷ்ணன், தமிழ்மாநில காங்கிரஸின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவருமான திரு.A. சதானந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர் மாவட்ட மகளிரணிச் செயலாளர் திருமதி.V. பூங்கொடி, தி.மு.க.வைச் சேர்ந்த தாளியூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. P.R. ஆடலரசு, தி.மு.க.வைச் சேர்ந்த, கோவை ராமநாதபுரம் பகுதி முன்னாள் செயலாளர் திரு.CT. D.ரவி, ம.தி.மு.க.வைச் சேர்ந்த குடிமங்கலம் ஒன்றியச் செயலாளரும், ஊராட்சிமன்றத் தலைவருமான திரு.R.R. வேலாயுதசாமி, தமிழ்மாநில காங்கிரஸின் மாநிலச் செயலாளர் திரு.K.S. பாலச்சந்திரன், தமிழ்மாநில காங்கிரஸின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான திரு.R. கிருஷ்ணகுமார், ம.தி.மு.க.வைச் சேர்ந்த, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சேர்வைக்காரன்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.R. முத்துராமலிங்கம் ஆகியோர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்னிலையில், அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கோயம்புத்தூர் தேர்தல் பிரச்சார பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், லட்சக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்களும், பொதுமக்களும், மிகுந்த உற்சாகத்தோடும், எழுச்சியோடும், "புரட்சித் தலைவி அம்மா வாழ்க" என எட்டுத்திக்கும் எதிரொலிக்க வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி, "எங்கள் வாக்கு இரட்டை இலைச் சின்னத்திற்கே" என்று உறுதியளித்து, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு தங்களின் பேராதரவைத் தெரிவித்தனர்.

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தேர்தல் பிரச்சார பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றியபின்னர், அங்கிருந்து திரும்பியபோதும், சாலையின் இருமருங்கிலும், லட்சக்கணக்கான பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும் எழுச்சிபொங்க திரண்டுநின்றி தங்கள் கரங்களை அசைத்து, பேராதரவு தெரிவித்தனர். அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, இரட்டை இலைச் சின்னத்தைக் குறிக்கும் வகையில், தமது விரல்களை உயர்த்திக் காண்பித்து, அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00