கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மரணமடைந்தது குறித்து கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

May 1 2016 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் மரணமடைந்தது குறித்து கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் திரு.V.S. பிரபின் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், கடலூர் மேற்கு மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், வட்டத்தூர் கிளைக் கழகச் செயலாளர் திரு.V.R. ஜெயபாலன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்திகேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அன்புச் சகோதரர்கள் திரு.பிரபின், திரு.ஜெயபாலன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில்அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரங்கல்

கிறிஸ்தவ மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் A.S.M. மரியநல்லு மறைவுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிறிஸ்தவ மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் A.S.M. மரியநல்லு உடலநலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தோழமை உணர்வோடு பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அன்புச் சசோதரர் பேராசிரியர் மரியநல்லுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர்செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00