கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிக் கிடந்த தமிழகத்தை மீட்டெடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஒளி படைத்த மாநிலமாக உருவாக்கியுள்ளார் : முதலமைச்சரின் தீவிர நடவடிக்கைகளால் தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அனைத்துத் தொழில்களும் வளர்ச்சிபெற்றுள்ளன

May 1 2016 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிக் கிடந்த தமிழகத்தை மீட்டெடுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஒளி படைத்த மாநிலமாக உருவாக்கியுள்ளார். முதலமைச்சரின் தீவிர நடவடிக்கைகளால், தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அனைத்துத் தொழில்களும் வளர்ச்சிபெற்றுள்ளன. தொழில்வளம் மிக்க கோவை மாநகரில் 24 மணி நேரமும் மின் விநியோகம் கிடைக்கப்பெறுவதால், தொழிற்சாலைகள் முழு உற்பத்தித் திறனை எட்டியுள்ளன.

வீடுகளில் தண்ணீர் இறைக்க பயன்படுத்தப்படும் மோட்டார்கள், இல்லத்தரசிகள் பயன்படுத்தும் கிரைண்டர்கள் என பல்வேறு மின்சாதனங்களை உற்பத்தி செய்யும் களமாக விளங்கி வருவது கோவை மாநகரம். இடைவிடாத தண்ணீர் விநியோகம் மற்றும் தங்குதடையற்ற மின்சாரம் ஆகிய காரணிகளால் தொழில் வளத்தில் முன்னணியில் விளங்கி வந்த கோவை மாநகரில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது தினசரி 18 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், தொழிற்சாலைகள், குறிப்பாக ஆர்டர் எடுத்து, பணிபுரியும் தொழிற்சாலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. உற்பத்தி குறைந்ததால், வருவாய் இழப்பு ஏற்பட்டது. வேலையில்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 5 லட்சம் பேர் நேரடியாகவும், சுமார் 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என தொழிலமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், முந்தைய தி.மு.க. அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால், தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தும் நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் போராதரவுடன் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அமோக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மின் உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மின் உற்பத்தி அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

இதனால், மின்வெட்டு படிப்படியாக நீக்கப்பட்டு, தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தடையற்ற மின்சாரம் காரணமாக, கோவை மாநகரில் தொழிற்சாலைகள் முழுவீச்சில் இயங்கி வருவதால், தொழில் துறையினரும், தொழிலாளர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, வரவேற்கவும், அவரது எழுச்சி உரையைக் கேட்கவும் கோவை மாநகர மக்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00