தமிழகத்தில் வேளாண் தொழிலை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, மாற்று பயிர்களையும் ஊக்கப்படுத்தி, அதன் அடிப்படையில் உதகையில் கொய் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டுகின்றனர்

May 1 2016 7:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் வேளாண் தொழிலை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மாற்று பயிர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில், உதகை மாவட்டத்தில் கொய் மலர் சாகுபடி செய்த விவசாயிகள், நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

இயற்கை எழில் சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இந்நிலையில், அங்கு விவசாயிகள் மாற்றுப் பயிராக கொய் மலர் பயிரிடுவதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனடிப்படையில், கொய் மலர் பயிரிட விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட்டனர். தோட்டக்கலை மூலம் பசுமை குடில்கள் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் வானிலைக்கு ஏற்ப வளரும் கார்னேசன், ஜெர்பரா, லிலிலியம், ஆந்தூரியம் உள்ளிட்ட 7 வகை மலர்களை உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டனர். இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் 6 கோடியே 55 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை செழிக்கச் செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில், எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மாற்றுப் பயிராக கொய் மலரை பயிரிட உதவியுள்ளதை நன்றியுடன் நினைவு கூறும் உதகை விவசாயிகள், அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என உறுதிபட தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00