நீலகிரி மாவட்டம் ரேலியார் அணையிலிருந்து ரூ.13.85 கோடி மதிப்பில் குழாய்களின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நாள்தோறும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்படுவதால் குன்னூர் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி

Apr 30 2016 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ரேலியார் அணையிலிருந்து 13 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் குழாய்களின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நாள்தோறும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி வழங்கப்படுவதால், குன்னூர் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள சிம்ஸ்பார்க், டால்பின்நோஸ், லாம்சிராக் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை தீர்க்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு குன்னூர் மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனை கனிவுடன் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, குன்னூர் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ரேலியார் அணையை தூர்வாரி ஆழப்படுத்தவும், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை குழாய்கள் மூலம் கிரேசில் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் ஆணையிட்டார். இதனையடுத்து, 13 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர்தேக்க சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனால் குன்னூர் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளும் பயனடைந்து வருகின்றனர். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க தொலைநோக்கு சிந்தனையோடு இத்திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு குன்னூர் மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00