கோயமுத்தூரில் நலிந்த பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள 2,912 வீடுகள் - முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

Apr 30 2016 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம், கோவையில் நலிந்த பிரிவு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன. இதனால் பயனடைந்துள்ள மக்கள் முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம், கோவையில் நலிந்த பிரிவு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான வீடுகள், கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டிதரப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அறிவித்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்ததன்படி 443 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உக்கடம், அண்ணாநகர், மலைநகர், மலுவிச்சம்பட்டி, கீரநத்தம் ஆகிய பகுதிகளில் 2,912 வீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு கட்டித்தரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சாலையோரங்களிலும், ஆற்றங்கறைகளிலும், வெள்ள அபாயத்துடன் வசித்து வந்த தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிதந்து, வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து கொடுத்த முதலமைச்சருக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கே என்றென்றும் தங்கள் ஆதரவு என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00