நீலகிரி மாவட்டம் உதகையில் 29 அரசுத்துறைகளுக்கான ஒருங்கிணைந்த கட்டடப்பணி நிறைவு - 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்காக பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

Apr 30 2016 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29 அரசுத்துறைகளுக்கான ஒருங்கிணைந்த கட்டடம் கட்டும்பணி நிறைவடைந்துள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அம்மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத் தலமான உதகையில் அரசுத்துறை அலுவலகங்கள், தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு அலுவலகமும் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அரசுத்துறை அலுவலகங்களுக்கு செல்வதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இதனை உணர்ந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29 துறைகளுக்கான ஒருங்கிணைந்த கட்டடத்தை கட்ட உத்தரவிட்டார். இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்படவுள்ளன. அரசுத்துறை அலுவகங்கள் ஒரே இடத்தில் இருப்பதால் காலவிரயமும், அலைச்சலும் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனால் உதகை மக்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00