அ.இ.அ.தி.மு.க.வுக்கு எதிராக, பொய்ப்பிரச்சாரம் செய்து வாக்குகளை அபகரித்துவிடலாம் என்ற கருணாநிதியின் கனவு நிறைவேறாது - விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுச்சியுரை - கருணாநிதியும், அவரது மகனும் எவ்வளவு கெஞ்சினாலும் மக்கள் தி.மு.க.வை மன்னிக்க மாட்டார்கள் என்றும் உறுதி

Apr 30 2016 7:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தில், விழுப்புரத்தில் நடைபெற்ற, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அலைகடலென திரண்டிருந்த லட்சோப லட்சம் மக்கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டினார். விழுப்புரத்தில் வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், இரட்டை இலைச் சின்னங்களோடும், வரவேற்பு பதாகைகளோடும் திரண்டு நின்று, வாழ்த்து முழக்கங்களுடன் முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, விழுப்புரத்தில் நடைபெற்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் பேருரையாற்றியபோது, மக்கள் நலன் ஒன்றையே தமது உயிர்மூச்சாகக் கொண்டு, தாம் செயல்படுத்திவரும் எண்ணிலடங்கா நலத்திட்டங்களையும், தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு நிகழ்த்தியுள்ள வரலாற்றுச் சாதனைகளையும் அடுக்கடுக்காக பட்டியலிட்டு, அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார். குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கருணாநிதியின் சந்தர்ப்பவாத, சுயநல அரசியலையும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும், அலங்கோலங்களையும் முதலமைச்சர் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார். இமாலய ஊழல்களைச் செய்து, நாட்டையே சூறையாடிய தி.மு.க. - காங்கிரஸ் கொள்ளைக் கூட்டணியை, வரும் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்யவேண்டும் என, விழுப்புரம் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்டிருந்த லட்சோபலட்சம் மக்களிடையே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00