முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால், தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளதாக அமைச்சர் பெருமிதம் : கருணாநிதியின் பொய்க் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்றும் உறுதி

Apr 30 2016 6:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால், தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளதாகவும், இதனை தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி, பொய்க் குற்றச்சாட்டுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும், தமிழக மக்கள் இதனை ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்றும் அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளி மின் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தினமலர் நாளிதழ், கடந்த 28-ம் தேதி செய்தி வெளியிட்டது. இதில் துளிகூட உண்மை இல்லை என்றும், கருணாநிதி மற்றும் தி.மு.க.வினரின் கற்பனை குற்றச்சாட்டை அந்நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது என்றும் அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன் சாடியுள்ளார்.

திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதனைத் திட்டங்கள் தந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை தாங்கிக் கொள்ள இயலாத கருணாநிதி, முறைகேடு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் இருந்த தொடர் மின்வெட்டை நீக்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும், முதலமைச்சரின் இந்த சாதனையை கொச்சைப்படுத்தும் வகையில் கருணாநிதி வேண்டுமென்றே கற்பனையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும், இதனை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்றும் அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன் தெரிவித்தார்.

பித்தலாட்ட அரசியலும், மோசடி வேலையும் கருணாநிதிக்கும், தி.மு.க.வினருக்கும் மட்டுமே கைவந்த கலை. 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றியை, இப்படிப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகளாலும், மோசடி அரசியலாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00