நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுவேதா என்ற மாணவி பொறியியல் பட்டம் பெற்று சாதனை : நரிக்குறவர்கள் சமுதாயத்திலிருந்து பொறியியல் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்

Sep 2 2016 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுவேதா என்ற மாணவி பொறியியல் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். நரிக்குறவர்கள் சமுதாயத்திலிருந்து பொறியியல் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடியை அடுத்துள்ள தேவராயநேரி பகுதியில் ஏராளமான நரிக்குறவர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் மகேந்திரன்-சீதா என்ற தம்பதியரின் மகள் சுவேதா என்பவர் தனது விடாமுயற்சியால், தொடர்ந்து போராடி, அங்குள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வெற்றிகரமாக B.E. computer science பட்டம் பெற்று முத்திரை பதித்துள்ளார். பள்ளியிலிருந்தே ஆங்கிலவழிக் கல்வி பயின்ற சுவேதா, நரிக்குறவர் சமுதாயத்திலிருந்து பொறியியல் பட்டம்பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. தற்போது, சுவேதா நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவித்து ஊக்கப்படுத்தி வருகிறார். சுவேதாவின் பெற்றோர், நரிக்குறவர்கள் கல்வி, நலவாழ்வு சொஸைட்டி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். நரிக்குறவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில், நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இனி வரும் காலங்களில் தங்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்க வழிவகை ஏற்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இந்த முயற்சிக்கு சுவேதா மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி, தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00