முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டம் - சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

Feb 14 2016 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், 61 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தமிழகம் முழுவதிலும் 68 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைக்க, தமது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வளாகப் பகுதியில் முதலமைச்சரை வரவேற்று பதாகைகள் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.

மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்க பெருநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, வனத்துறை அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் திரு. அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் திரு. அசோக்குமார், சுற்றுச்சூழல் துறை செயலாளர் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா, தலைமை வனக்காவலர் திரு. கிருஷ்ணகுமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. ராஜேந்திரன் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

பின்னர் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஆலமரக்கன்று ஒன்றினை நட்டு இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, மரம் நடும் விழாவிற்கான பெயர் பலகையையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.



முதலமைச்சர் ஜெயலலிதா ஆலமரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், 61 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக இன்று சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆலமரக்கன்றினை நட்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் "மாபெரும் மரம் நடும்" திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012-ஆம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ஆம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகளும், 2014-ஆம் ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும், 2015-ஆம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும் நடும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு, முதலமைச்சரின் 68-வது பிறந்தநாளையொட்டி மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், 61 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது வனத்துறை சார்பில் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்- மேலும், இம்மரக்கன்றுகள் வனப் பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும்- இத்திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. தோப்பு என்.டி. வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் திரு.கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் திரு.அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் திரு. அசோக் குமார், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் முனைவர் நா. கிருஷ்ணகுமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.டி.கே. ராஜேந்திரன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00