முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - ஆலோசனைக் கூட்டங்கள்

Feb 14 2016 8:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. சார்பில், கோபால்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் நான்கரை ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு. நத்தம் ஆர். விஸ்வநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. உதயகுமார், கழக பேச்சாளர் திருமதி.சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலவச பொது மருத்துவ முகாமை அமைச்சர் திரு. ப. மோகன் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில், விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்கள் கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றனர். இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், திரு. எஸ். ராஜேந்திரன், செஞ்சி சேவல் திரு.வெ. ஏழுமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, கழக மாணவரணி சார்பில் சென்னை பார்த்தசாரதி கோவிலில் அன்னதானமும், ஆயிரத்து 68 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. இதில், அமைச்சர்கள் திருமதி. பா. வளர்மதி, திருமதி. எஸ் கோகுல இந்திரா, திரு. எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஆயிரத்து 95 நபர்களுக்கு 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு.P. பழனியப்பன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் திரு. பி. தங்கமணி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், வரும் ஃபிப்ரவரி 24ம் தேதி நாமக்கல்லில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வது, தொடர்ந்து 3 நாட்களுக்கு யாகசாலை பூஜைகள் நடத்துவது, 68 கோபூஜை நடத்துவது, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மும்மத வழிபாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு திர்மானங்கள் எடுக்கப்பட்டன.

திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவை சார்பில், களக்காட்டில் 10 ஆயிரத்து 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு. R.B. உதயகுமார் வழங்கினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியக் கழகம் சார்பில் காக்களூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, தண்ணீர் குளம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 668 பேருக்கு வேட்டி-சேலைகளும், ஆயிரத்து 68 பேருக்கு சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு. பி.வி. ரமணா வழங்கினார். இதேபோல், வழக்கறிஞர் பிரிவு சார்பில் வங்கணூரில் நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு, கழக அரசின் சாதனைகளையும், நலத்திட்ட உதவிகளையும் விரிவாக எடுத்துக்கூறினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் தொகுதி சார்பில் பெரியார் நகரில் நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், 6 ஆயிரத்து 68 பேருக்கு வேட்டி-சேலைகள் தலா 5 கிலோ அரிசி, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீநவசக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன், கழக பாசறை செயலாளர் திரு. ப. குமார் எம்.பி. கழக அமைப்புச் செயலாளர் திருமதி. எஸ். வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கன்னிபீவி தர்ஹாவில் கந்தூரி விழாவினை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டியும் நிர்வாகிகள் சார்பில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி மேற்கு, பேரிகை, உள்ளிட்ட இடங்களில் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது மருத்துவ முகாம் நடத்துவது, கழக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00