முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த, 'அம்மா சிறுவணிகக் கடன்' திட்டம் : கோவில்பட்டி, பவானி, சாத்தூர் ஆகிய இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கடன் உதவி - கடனுதவியை பெற்றவர்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி

Feb 7 2016 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த, 'அம்மா சிறுவணிகக் கடன்' திட்டத்தின்கீழ், சிறு வணிகர்களுக்கு தொடர்ந்து வட்டியில்லா கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடனுதவி பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறுவணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் வகையிலும் "அம்மா சிறு வணிக கடன் திட்டத்தை" முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும், கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டி தொகை 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் எனவும், இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும், குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதற்கான சிறப்பு முகாம்கள், கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை நடைபெற்றன. இந்த முகாம்கள் மூலம், சிறு வணிகர்களிடம் இருந்து விண்ணப்பப் படிவங்கள் பெற்று, ஏற்கெனவே 38 கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பரிந்துரை செய்யப்பட்ட சிறு வணிகர்களுக்கு தொடர்ந்து கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாசரேத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 200 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடனுதவியை கூட்டுறவு வங்கிகளின் சார்பில், அமைச்சர் திரு. S.P. சண்முகநாதன் வழங்கினார். கடனுதவியை பெற்றுக் கொண்டவர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இன்று சிறு வணிகர்கள் 200 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடனுதவியை, அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாச்சலம் வழங்கினார். திருமதி. சத்தியபாமா எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடனுதவி பெற்றுக் கொண்ட பயனாளிகள், வட்டியில்லாமல் சிறு தொழில் கடன் வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை மூலம் 750 சிறு வணிகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. அமைச்சர் திரு. R.B. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடனுதவி பெற்றுக் கொண்டவர்கள், வட்டியில்லா கடன் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00