முதலமைச்சர் ஜெயலலிதா, தங்கள் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தமிழகத்தில் 7 ஆயிரத்து 936 மனுக்கள் அளிக்கப்பட்டன - இந்தியாவிலேயே எந்தஓர் அரசியல் இயக்கத்திலும் இதுவரை இல்லாத சாதனை நிகழ்வு

Feb 7 2016 8:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட, கழகத் தொண்டர்களிடமிருந்து 26 ஆயிரத்து 174 விருப்ப மனுக்கள் குவிந்துள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா, தங்கள் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தமிழகத்தில் 7 ஆயிரத்து 936 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது, இந்தியாவிலேயே எந்தஓர் அரசியல் இயக்கத்திலும் இதுவரை இல்லாத சாதனை நிகழ்வாகும். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மிகச் சிறப்பான தலைமையின்கீழ், அ.இ.அ.தி.மு.க. மென்மேலும் அதிக செல்வாக்கு பெற்று வருவது, இதன்மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களது விருப்ப மனுக்களை ஜனவரி மாதம் 20-ம் தேதிமுதல், தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, இறுதி நாளான நேற்றுவரை, 26 ஆயிரத்து 174 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 936 மனுக்களை கழக உடன்பிறப்புகள் சமர்ப்பித்துள்ளனர்.

கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தங்கள் தொகுதியிலும், இன்ன பிற தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று இளைஞர்கள், இளம்பெண்கள், மகளிர் என ஆர்வத்துடன் 7 ஆயிரத்து 936 கழக உடன்பிறப்புகள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர் என்பது, எந்த ஓர் அரசியல் இயக்கத்திலும் இதுவரை நடைபெற்றிராத வியப்புக்குரிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் ஏராளமான கழக உடன்பிறப்புகள், கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர் என்பது, `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மிகச் சிறப்பான தலைமையின் கீழ், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கழக உடன்பிறப்புகள், தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி, தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 698 மனுக்களையும், புதுச்சேரி மாநிலத்தில் 332 மனுக்களையும், கேரள மாநிலத்தில் 208 மனுக்களையும் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 26 ஆயிரத்து 174 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம் வேட்பு மனுக் கட்டணமாக 28 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00