முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட, 26 ஆயிரத்து 174 விருப்ப மனுக்கள் குவிந்தன

Feb 7 2016 7:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்தபடி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில், கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான நிறைவுநாளான நேற்றுவரை, சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், இளம்தலைமுறையினரும், பேரார்வத்தோடும், மிகுந்த உற்சாகத்தோடும் மனுக்களைப் பெற்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்தபடி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில், கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பும் கழகத்தினர், கடந்த மாதம் 20-ம் தேதிமுதல், சென்னை, தலைமைக் கழக அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வந்தனர். விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் கடந்த 3-ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து, நேற்று மாலை 5 மணிவரை, கழகத்தினர் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

கழகத் தொண்டர்களில், இளம்தலைமுறை பட்டதாரிகள், மருத்துவம், பொறியியல் பட்டதாரிகள், இளம் பெண்கள் உட்பட ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் அளித்தனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சி முறை, திறமையான நிர்வாகம், செயலாற்றல், பல்வேறு சாதனைத் திட்டங்கள் மற்றும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி, விருப்ப மனு அளிப்பதாக இளம்பெண்களும், இளைஞர்களும் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

முதலமைச்சர் செல்விஜெயலலிதா, தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் மனுக்களை அளித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளதும், அகில இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட, பேரார்வத்துடனும், எழுச்சியோடும் இளம் தலைமுறையினர் ஆயிரக்கணக்கானோர் விருப்பமனு அளித்திருப்பதும், வரும் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மகத்தான வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00