மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

Feb 7 2016 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, அமைச்சர்கள், திரு. செல்லூர் கே. ராஜு, திரு. P. தங்கமணி ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சுப்புலாபுரம் கிராமம், பாறைபட்டி சோதனைச் சாவடி அருகே, அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 17 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 32 பேர், மதுரை, திருமங்கலம் பேரையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் சென்று, ஆறுதல் தெரிவித்ததோடு, சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் திரு. P. தங்கமணி, மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் ஆகியோர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மருத்துவர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00