சிறு வணிகர்கள், சாலையோர சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த, "அம்மா சிறுவணிகக் கடன் உதவித் திட்டம்: 38 கோடியே 19 லட்சம் ரூபாய் கடனுதவி இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

Feb 6 2016 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் "அம்மா சிறு வணிக கடன் உதவி திட்டத்தின்" கீழ், சிறு வணிகர்களுக்கு நேற்று முன்தினம் வரை, 38 கோடியே 19 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 76,500 சிறு வணிகர்கள் பயனடைந்துள்ளனர்.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச் சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறுவணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து, தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகை செய்யும் அம்மா சிறு வணிக கடன் திட்டத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும், கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் எனவும், இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில், சிறு வணிகர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, சென்னையில் 298 முகாம்கள் உட்பட தமிழகம் முழுவதும் 6,453 முகாம்கள் மூலம் சிறு வணிகர்களுக்கு, அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 78 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 76,383 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 38 கோடியே 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவியை பெற்றுக்கொண்ட சிறு வணிகர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00