முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள்

Feb 6 2016 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவையடுத்து, மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தாயுள்ளத்துடன் நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு பயனாளிகள் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 26 ஆயிரத்து 271 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில், ஆயிரத்து 941 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு.முக்கூர் என்.சுப்ரமணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செஞ்சி சேவல் வெ.ஏழுமலை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், பிளஸ்-டூ பயிலும் 421 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 7 ஆயிரம் பேருக்கும், காயல்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 ஆயிரம் பயனாளிகளுக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு. S.P. சண்முகநாதன் வழங்கினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00