கனமழையால் வீடுகளை இழந்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், மறு குடியமர்வு செய்யப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 33 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

Feb 5 2016 2:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்த குடிசைவாழ் மக்களுக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின் பேரில், பிழைப்புபடியுடன் ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் திட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கியுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பணிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளன.

சென்னையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்கள் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். இது போன்ற இயற்கை பேரிடர்களுக்கு உட்படுத்தப்பட்டு வாழ்ந்து வந்த ஏழை குடிசைப்பகுதிவாழ் குடும்பங்களின் இன்னல்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக இக்குடும்பங்களின் துயர்போக்க சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி 5 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி மறுகுடியமர்வு பணிகளை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வீடும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமைலயறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை கொண்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலும் குடிநீர் வசதி, மின்சார வசதி, மின்விசிறி அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பகுதிகளில் கழிவுநீரகற்று அமைப்புகள், சாலைகள், மழைநீர் வடிகால், குப்பைத் தொட்டிகள், தெருமின் விளக்குகள் கான்கீரிட் நடைபாதை, ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், நியாயவிலை கடைகள், பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பேருந்து வசதிகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று வரை, பாதிப்புக்குள்ளான 3 ஆயிரத்து 590 குடும்பங்கள் ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் திட்டப்பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அக்குடும்பங்களுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இடமாற்றபடியாக ஒரு முறை 5 ஆயிரம் ரூபாய் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிழைப்புப்படியாக மாதம் 2,500 ரூபாய் வீதம் ஓராண்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது - தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளில் கட்டுமான செலவினத்தில் 10 சதவீதம், பயனாளிகளின் பங்காக வசூலிக்கப்படும் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது;

இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தரவிட்டு, இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் ஆகியவற்றின் மூலமாக நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் நடைபெற உள்ளது.

ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் உள்ள 150 தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, அவர்கள் வாழும் இடத்திலேயே அவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது - இந்த முகாமில் இரவு காவலர், ஓட்டுநர், சமையலர், கம்பியர் போன்ற இனங்களில் 8 ஆயிரத்திற்கும் மேலான பணிகளுக்கு, பணிநியமன ஆணைகளை, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வழங்கவுள்ளன.

வேலையளிப்போர் எதிர்பார்க்கும் சிறப்பு திறன்களை அறிந்து, அதற்கான பயிற்சிகளை அளிக்க ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 25க்கும் மேற்பட்ட தொழிற்திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் கலந்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வளர்ச்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களில் 4,200 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 4 கோடி ரூபாய் செலவில் திறன் பயிற்சிகள் வழங்க பயிற்சியாளர்கள் தேர்வு செய்யவும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயல்நாட்டில் வேலைவாய்ப்பினை பெற விழைவோர், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவும், பதிவுகளைக் புதுப்பித்து கொள்ளவும் கூடுதல் பதிவுகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சுய தொழில் தொடங்க ஆலோசனைகளும், போட்டித்தேர்வுகள் குறித்த ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மறுகுடியமர்வு திட்டப்பகுதிகளிலிருந்து துரைப்பாக்கத்திற்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மறுகுடியமர்வு செய்யப்பட்ட 3,590 குடும்பங்களுடன் ஏற்கெனவே ஒக்கியம்-துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் அதனருகில் வசித்து வரும், குடிபெயர்ந்த 29,410 குடும்பங்களும் ஆக மொத்தம் 33 ஆயிரம் குடும்பங்களும் இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உள்ளது - ஆகவே, ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கத்தில் வசிக்கும் மறுகுடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00