முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

Feb 5 2016 7:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, கரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு காரணங்களால் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளால் "புன்னகையைத் தேடி" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தில் சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை உட்பட அரசு அலுவலர்களை கொண்டும், அரசு சாரா தன்னார்வ குழுக்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினரைக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கோயில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆதரவின்றி திரியும் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் தேடுதல் பணியில், 11 ஆண்குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என 14 குழந்தைகள் மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம், தென்னிலை, ஈசநத்தம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த குழந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தார். மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளில் இருவருக்கு காதொலிக்கருவிகள் வழங்கப்பட்டதுடன், மாதாந்திர உதவித்தொகை மற்றும் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, விலையில்லா தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00