முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார் : தமிழகத்தில் கனமழை தொடர்வது குறித்து கவலை தெரிவித்ததுடன் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி

Dec 2 2015 3:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, பிரதமர் திரு. நரேந்திரமோடி நேற்று மாலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வது குறித்து தமது கவலையை தெரிவித்ததுடன், மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார். இதற்காக முதலமைச்சர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடரும் நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேற்றுமாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் திரு. நரேந்திரமோடி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே கனமழை பெய்த, அடுத்த சில நாட்களிலேயே 2-வது முறையாக பலத்த மழை பெய்துவருவது குறித்து தமது கவலையை வெளியிட்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஏற்கனவே பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க, உடனடியாக மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பிவைத்ததற்காக, பிரதமருக்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். தற்போதும் தமிழகத்தில் கனமழை தொடர்வது குறித்து, பிரதமர் தமது கவலையை வெளியிட்டுள்ளதற்காகவும் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.

ஏற்கனவே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்து, மத்தியக் குழுவினர் டெல்லி திரும்பிய உடனேயே, தமிழகத்தில் மீண்டும் பெரும் மழை பெய்வது குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்துரைத்தார்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவுக்கு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மிக பலத்த மழை பெய்து வருவதால், இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சமாளிக்க மாநில அரசு இயந்திரம் முழு அளவில் முடுக்கிவிடப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்துக்கூறினார்.

தமிழக அரசின் உத்தரவின் பேரில், மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, கடலோர பாதுகாப்புக் குழு உள்ளிட்ட அமைப்புகளோடு, தமிழக வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு வருவதாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்துரைத்தார்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி செய்ய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் கனமழை வெள்ள மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம், பிரதமர் திரு. நரேந்திரமோடி உறுதி அளித்தார். இது தொடர்பாக பிரதமர் ஆழ்ந்த அக்கறை காட்டுவது குறித்தும், அனைத்து உதவிகளையும் தமிழக அரசுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருப்பதற்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது நன்றியை பிரதமருக்கு தெரிவித்துக்கொண்டார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00