கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை - அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை நடவடிக்கை

Dec 1 2015 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி அதன் பங்குகளை மலேசிய நிறுவனத்திற்கு முறைகேடாக விற்பனை செய்த விவகாரத்தில், தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மற்றும் அவரது சகோதரரும், சன்குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதிமாறன் ஆகியோரை அமலாக்கப்பிரிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை மேற்கொண்டது. முறைகேட்டின் மூலம் கிடைத்த அவர்களது 700 கோடி ரூபாய் சொத்துகளையும் முடக்கியது. இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேட்டில் ஆதாயம் பெற்றதாக, அமலாக்கப்பிரிவு கண்டுபிடித்ததை அடுத்து, கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் 2 இயக்குநர்கள் மீது அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய டாக்டர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00