வரும் 6-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதிவரை மாவட்ட அளவிலான அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

Dec 1 2015 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசின் தொலைநோக்கு திட்டங்கள், சமூக வலைதளங்களை கழக வளர்ச்சிக்கும், தேர்தலுக்கும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள், தேர்தல் யுக்திகள் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது தொடர்பாக வரும் 6-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என அ.இ.அஇ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தமிழகத்தில் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியில் ஏற்பட்டிருக்கும் புரட்சி என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைத்த சாதனைகளில் ஒன்று- குறிப்பாக, இன்றைக்கு தமிழக இளைஞர்களும், இளம் பெண்களும் உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கே தகவல் தொழில்நுட்பப் பொறியியல் துறைகளில் தன்னிகரற்று விளங்குகின்றனர்- இதற்கு அடிப்படையாக அமைந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிகளின்போது, உயர் கல்விக்கு தரப்பட்ட முக்கியத்துவமும், சுதந்திரமும் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தில் இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் கணினி இல்லாத வீடே இல்லை என்ற நிலையை தமது அரசு உருவாக்கி இருக்கிறது- இந்த சாதனையினுடைய மகத்துவம் என்பது ஏழை, எளிய, கிராமப்புற ஆண்களும், பெண்களும் இன்றைக்கு தமது தலைமையிலான அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினி மூலம் உலகக் குடிமக்களாக மாறி வருகின்றனர் - இது, தமக்கு மிகுந்த மன நிறைவைத் தருகின்ற சாதனை என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தில் இன்றைக்கு சமூக வலைதளங்கள் அறிவுக்கு திறவு கோலாகவும், வணிகத்திற்கு வாய்ப்பளிக்கும் சந்தையாகவும் மாறி இருக்கின்றன- எனவேதான், `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக மக்களுக்கு பயன் தரும் கருவியாக மாற்ற, கழகத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றை தாம் உருவாக்கி இருப்பதாகவும், வெறும் பிரச்சாரத்திற்காக இந்த அரிய சாதனத்தைப் பயன்படுத்திடாமல், தமிழக மக்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் வளர்ச்சிக்கும், எதிர்கால வளமை என்ற தொடுவானம் நோக்கி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய புதிய பயணத்திற்கும் தகவல் தொழில்நுட்பம் பயன்பட வேண்டும் என்பதே தமது உளமார்ந்த விருப்பமாகும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியை `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில், தமது தலைமையிலான அரசின் தொலை நோக்கு திட்டங்கள்; சமூக வலைதளங்களை கழக வளர்ச்சிக்கும், தேர்தலுக்கும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்; தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் யுக்திகள் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக, வருகின்ற 6-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை "கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள்" நடைபெறும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவை உள்ளடங்கிய அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் திரு. அஸ்பயர் K. சுவாமிநாதன் தலைமையிலும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் - சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00