பெண்களின் பாதுகாப்பிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் ஏராளமான நடவடிக்கைகளால் பெண்கள் பணிபுரிய தமிழகம் தான் இந்திய அளவில் சிறந்த மாநிலம் என பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

Nov 28 2015 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பெண்களின் பாதுகாப்பிற்காக மேற்கொண்டு வரும் ஏராளமான நடவடிக்கைகளால், பெண்கள் பணிபுரிய தமிழகம் தான் இந்திய அளவில் சிறந்த மாநிலம் என பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்வி, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்பு முடித்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மத்தியில், பல்வேறு திறன்வளர்ப்பு நிறுவனங்கள் இணைந்து, அவர்கள் பணிபுரிய விரும்பும் மாநிலம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வெளியிடப்பட்ட "இந்தியா ஸ்கில்ஸ் ரிப்போர்ட் 2016" என்னும் ஆய்வறிக்கையின்படி, பெண்கள் பணிபுரிய விரும்பும் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

நாடு முழுவதும் உள்ள 7 யூனியன் பிரதேசங்கள் உட்பட 29 மாநிலங்களில் பணிபுரியும் 5 லட்சத்து 20 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பெண்கள், தமிழகத்தில்தான் பணி முடித்து பாதுகாப்புடன் இல்லங்களுக்குச் செல்ல முடிகிறது என்று தெரிவித்தனர். மேலும், இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் தனியார் நிறுவனங்கள் எளிதான நடைமுறைகளுடன் தொழில்தொடங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முனைப்புடன் பணியாற்றி வருகிறார் எனவும் ஆய்வு மேற்கொண்ட People Strong நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00