முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு - 2 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற நடவடிக்கை

Nov 28 2015 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய், திருமங்கலம் பிரதானக் கால்வாய் மற்றும் வைகை பழைய பாசனத்திற்காக இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்மூலம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வேளாண்பெருங்குடி மக்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து, பெரியாறு பிரதானக் கால்வாய் ஒருபோக பாசன நிலங்களுக்கும், இருபோக பாசனத்தில், இரண்டாவது போகப் பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின்கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பழைய பாசனப் பகுதிகளுக்கும் இன்றுமுதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து இன்றுமுதல், தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. செல்லூர் கே. ராஜூ, மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாநகர மேயர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் மூலம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 59 ஆயிரத்து 663 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00