சென்னையில் கனமழை பெய்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சேதங்கள் தவிர்ப்பு - சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்ட முதலமைச்சருக்கு சென்னை மாநகராட்சி நன்றி - பாராட்டு

Nov 28 2015 7:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மாநகரில், கடந்த 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்த போதிலும், அதனால் ஏற்பட்ட சேதங்களை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டதுடன், மழைக்கு முன்பாகவே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பாராட்டும் நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் மேயர் திரு. சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. சென்னை மாநகரில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சேதங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து ஓரிரு நாட்களில் இயல்புநிலை திரும்ப வழிவகை செய்ததுடன், வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. சென்னை நகரில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும், பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவும் அனைத்து மண்டலங்களுக்கும் IAS அதிகாரிகளை நியமித்து, பணிகளை துரிதப்படுத்தியதற்காகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து, மாநகராட்சிக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பருவமழைக்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலேயே, கனமழை கொட்டித் தீர்த்தபோதிலும், பெருமளவு உயிர்ச்சேதமும், சொத்துக்கள் சேதமும் குறைக்கப்பட்டுள்ளதற்காக முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெருமளவு பெய்தபோதிலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, திருச்சி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்ரீரங்கத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை திறந்து வைத்தது, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலை, அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து மகா சம்ரோக்ஷணம் நடத்தி வைத்ததற்காகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00