முதலமைச்சர் ஜெயலலிதா வரலாற்று நிகழ்வாக தொடங்கிவைத்த, சென்னை மெட்ரோ ரயில் சேவை - நான்காம் கட்ட பணிக்காக ஆயிரத்து 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஜப்பான் அரசு முடிவு

Nov 28 2015 7:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வரலாற்று நிகழ்வாக தொடங்கிவைத்த, சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் கட்ட பணிக்காக ஜப்பான் அரசு 1080 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கவுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதியன்று முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பிரேசிலில் இருந்து பெறப்பட்ட முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், 110-ன் கீழ் 33 கிலோ வோல்ட் உயர் மின் அழுத்த துணை மின் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, கடந்த ஜுன் மாதம் 29-ஆம் தேதி, சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 புள்ளி ஒன்று ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள, உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயிலின் பயணிகள் சேவையை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2007-08 முதல் 2010-11 வரையில் இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து 143 கோடியே 31 லட்சம் ரூபாய் ஆகும் - தற்போது வரை செலவிடப்பட்ட தொகை 10 ஆயிரத்து 751 கோடியே 94 லட்சம் ரூபாய் ஆகும் - அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 9 ஆயிரத்து 608 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மே மாதத்தில் 3 சதவீதமாக இருந்த ஒட்டு மொத்த செயலாக்க சாதனை, 76 சதவீதமாக உயர்ந்திருந்தது - மேலும், இத்திட்டத்திற்குத் தேவையான அரசு நிலங்களை மாற்றுதல், நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து மற்றும் பயன்பாடுகளை மாற்றியமைத்தல் மற்றும் பல்வேறு சட்டப்படியான ஒப்புதல்களை பெறுவதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதன் சார்பு நிறுவனங்களும் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் கட்டப் பணிகளுக்காக ஜப்பான் அரசு 1080 கோடி ரூபாய் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியா - ஜப்பான் அதிகாரிகள் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.குஜராத் மெட்ரோ ரயில் - அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டடத்திற்கும் ஜப்பான் அரசு நிதி உதவி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00