முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் மருத்துவ சேவை திட்டங்கள் அளப்பரியவை என மத்திய அரசு பாராட்டு - உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவிப்பு

Nov 27 2015 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ ரீதியில் மக்களுக்கு சேவை செய்வதில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இந்திய உடலுறுப்புதான தினவிழா டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் திரு. Jagat Prakash Nadda தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மத்திய அமைச்சர் திரு. J.P. Nadda-விடம் இருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு. J.P. Nadda, மருத்துவ ரீதியில் மக்களுக்கு சேவை செய்வதில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை என்றும், அவருடைய முயற்சிகளால்தான் தமிழகம் இந்த விருதினை பெற்றுள்ளது என்றும் பாராட்டினார்.

விருதினைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வரும் திட்டங்களையும், செயல்பாட்டினையும் விவரித்தார். நடப்பு நிதியாண்டில் சுகாதாரத்துறைக்காக 8,245 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஆயிரத்து 945-ல் இருந்து 2,655 ஆக உயர்த்தப்பட்டிருப்பதோடு, புதிதாக மேலும் பல மருத்துவ மற்றும் பல்மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 3,966 உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திரு.B.P. Sharma, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் Jagdish Prasad உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00