இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 29 மீனவர்களையும், 53 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் - ராஜாங்க ரீதியில் தலையிட்டு விரைந்து தீர்வுகாண வலியுறுத்தல்

Nov 27 2015 7:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை கடற்படையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 15 மீனவர்கள் உட்பட அந்நாட்டு சிறைகளில் உள்ள 29 மீனவர்கள் மற்றும் 53 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், கடந்த 8-ம் தேதி படகு பழுதானதால், இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய 4 தமிழக மீனவர்களையும் பாதுகாப்புடன் அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், பாக் நீரிணைப் பகுதியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மற்றொரு சம்பவம் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது சம்பவங்கள் தொடர்ந்து நீடிப்பது, மீனவ மக்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து, 2 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் - மற்றொரு நிகழ்வாக, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் - இந்த ஏழை மீனவர்கள் தங்களது ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை அமைதியான முறையில் மேற்கொண்டிருந்ததாகவும், வரலாற்று ரீதியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியான பாக் நீரிணையில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்க, கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில், இந்தியா-இலங்கை இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் செல்லத்தக்கத் தன்மையை எதிர்த்து, உறுதியான ஆதாரங்கள் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் தாம் ஏற்கெனவே தொடர்ந்துள்ள வழக்கு காரணமாக, இரு நாடுகளுக்கு இடையேயான சர்வதேச கடல் எல்லைக்கோடு பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், இவ்வழக்கில் தமிழக அரசும் தன்னை வாதியாக இணைத்துக்கொண்டுள்ளது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி, இலங்கை அரசின் வசம், 50 படகுகள் பல மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன - தற்போது கடுமையான வடகிழக்கு பருவமழையால், குறிப்பாக இந்த ஆண்டு மிகஅதிக மழைப் பொழிவு இருப்பதால், தங்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் சீரமைக்க முடியாத அளவு பழுதடையும் என்பதால், தமிழக மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் - இலங்கை கடற்கரையில் நிலவும் மோசமான தட்பவெட்ப நிலையால் கவனிப்பாரின்றி கிடக்கும் மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான படகுகள் மிகுந்த சேதமடைந்திருப்பது வேதனையடையச் செய்துள்ளது - எனவே, இலங்கை வசம் உள்ள படகுகள் குறித்து, அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் நிலையில் எடுத்துச் சென்று, அவற்றை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள் மற்றும் அவர்களின் 3 படகுகள் உட்பட, இலங்கை சிறைகளில் உள்ள 29 தமிழக மீனவர்களையும், 53 மீன்பிடி படகுகளையும் பாதுகாப்புடன் விடுவிக்க, தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த 8-ம் தேதி, விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்று, படகு பழுதானதால் இலங்கை கடற்கரையோரம் ஒதுங்கிய 4 தமிழக மீனவர்கள், அந்நாட்டில் தொடர்ந்து தவித்து வருவதாகவும், அவர்களையும் விரைந்து பாதுகாப்புடன் தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00