சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் குடிநீர் பணிகள் முடிவடைந்துள்ளதால், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவு

Nov 24 2015 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, சென்னை நகருக்கு குடிநீர் வழங்க பயன்படும் ஏரிகளில் அதிக நீர் இருப்பு, கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையங்கள் மூலம் பெறப்படும் நீர் மற்றும் புதிய வீராணம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நீர் ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை நகருக்கு, இனி நாள்தோறும் 830 மில்லியன் லிட்டர் குடிநீரை மீண்டும் வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆவடி, அம்பத்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில், குடிநீர் பணிகள் முடிவடைந்துள்ளதால், இப்பகுதிகளுக்கு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில், மிகவும் குறைவான அளவே மழை பெய்ததால் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது என்றும், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கல் நிலவரம் குறித்து அடிக்கடி தாம் ஆய்வு செய்து வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை நகருக்கு குடிநீர் தடையின்றி கிடைத்திட, கடந்த 2004-ஆம் ஆண்டில் தம்மால் கொண்டுவரப்பட்ட புதிய வீராணம் குடிநீர் திட்டத்திலிருந்து, நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது என்றும், அது போலவே, தமது அரசால் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் மீஞ்சூர் திட்டம் மற்றும் தமது அரசால் கடந்த 2013-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட நெம்மேலி குடிநீர் திட்டம் ஆகியவற்றால் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்தி, அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை நகருக்கு பெறப்படுகிறது - மேலும், முழு அளவு தண்ணீர் வழங்கப்படாததால் நீரின் அழுத்தம் குறைவு காரணமாக, குழாய்களில் குடிநீர் பெற இயலாத இடங்களில், 8 ஆயிரத்து 500 குடிநீர் தொட்டிகள் அமைத்தும், 6 ஆயிரம் லாரி நடைகள் மூலமூம் குடிநீர் வழங்கப்படுகிறது - 5 ஆயிரம் கைபம்புகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கப் பயன்படும் ஏரிகளில், தற்போதைய பெருமழைக்கு முன்னர் வரை, போதிய தண்ணீர் இல்லாததால், சென்னைக்கு நாளொன்றுக்கு 535 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது - தற்போதைய வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, 9,053 மில்லியன் கனஅடி நீர், சென்னை குடிநீருக்கு பயன்படும் ஏரிகளில் இருப்பில் உள்ளது - தற்போது ஏரிகளில் உள்ள நீர் இருப்பு; இரண்டு கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையங்கள் மூலமாக பெறப்படும் நீர் மற்றும் புதிய வீராணம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நீர் ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்கிட தாம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இதன் காரணமாக சென்னை நகர மக்களுக்கு தேவையான குடிநீர் நாள்தோறும் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆவடி, அம்பத்தூர் மற்றும் உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் பணிகள் முடிவுடைந்து, தற்போது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க இயலும் என்பதால், இந்த பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00