தமிழகத்தில் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை வைத்து "அரசியல் நடத்துவது அழகல்ல" - எதிர்கட்சிகளின் செயல் குறித்து தினமணி நாளிதழ் விமர்சனம் : சீரமைப்புப் பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாகவும் பாராட்டு

Nov 24 2015 9:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை வைத்து "அரசியல் நடத்துவது அழகல்ல" என தினமணி நாளிதழ், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்ச்சித்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குதல் போன்ற பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் அந்த நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை இல்லாத அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு, அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேரில் அனுப்பி, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதை பல்வேறு தரப்பினரும், நாளிதழ்களும் பாராட்டிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பிரபல தமிழ் நாளிதழான தினமணியில் இடம்பெற்றுள்ள இன்றைய தலையங்கத்தில், மழைச் சேதம், உயிர்ச்சேதம் குறித்து எதிர்க்கட்சிகள் குறைகூறிக்கொண்டிருக்கும் நிலையில், மழைச் சேதங்களை ஈடுசெய்ய வெள்ள நிவாரண நிதியாக 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவை என்றும், உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் முதலமைச்சர் கடிதம் எழுதியதையும், முதலமைச்சரின் கோரிக்கையைத் தொடர்ந்து, மத்திய அரசு உடனடியாக 939 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதியை விடுவித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வெள்ள நிவாரண அறிக்கை தொடர்பான கடிதம் அனுப்பிய சில நேரங்களில், மத்திய அரசு நிதியுதவியை விடுவிக்க ஆணை பிறப்பித்தது ஆறுதலாக அமைந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே 500 கோடி ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விடுவித்துள்ளார்; தற்போது மத்திய அரசின் நிதியுதவியும் கிடைப்பதால், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேலும் தீவிரமாக முடுக்கிவிடப்படும் என்றும் தெரிவித்துள்ள அந்த நாளிதழ், மத்திய குழுவின் ஆய்வுக்குப் பின்னர், கணிசமான நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் குறைகூறி வரும் எதிர்க்கட்சிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதும், வீடுகளை இழந்தோருக்கு தற்காலிக முகாம்கள் அமைத்து தருவதும்தான் முதல்கட்ட பணி என்பதை உணரவேண்டியதுடன், அந்தப் பணியை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் மழை நீர் வடியவில்லை என்பதை அரசின் மீதான குற்றச்சாட்டாக சொல்லமுடியாது - சாதாரண சுரங்கப்பாதையில் தேங்கும் நீரைப்போன்று, புறநகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனே வெளியேற்றுவது சாத்தியமல்ல; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உறைவிடம் ஆகியவற்றை தடையின்றி வழங்குவதும், போக்குவரத்துக்கு வழிசெய்வதுதான் இப்போதைக்கு உடனடியாக இயலக்கூடியவை; மின் இணைப்புகளை சீர்செய்தல், பாதைகளை சரிசெய்தல் போன்றவை எல்லாம் மழை நின்ற பிறகே மேற்கொள்ளவேண்டிய பணிகள் என்பதை எதிர்க்கட்சிகள் நன்கு உணரவேண்டும்; வெள்ளச்சேதங்களை வைத்து அரசியல் நடத்துவது அழகல்ல என்று தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00