முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு - மழை வெள்ள நிவாரணத்திற்கு உடனடி நிதியுதவியாக 939 கோடியே 63 லட்சம் ரூபாய் விடுவிப்பு

Nov 23 2015 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெள்ள நிவாரண உதவிகோரி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசு உடனடி நிதியுதவியாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வெள்ள சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க விரைவில் மத்திய ஆய்வுக் குழுவை தமிழகத்திற்கு அனுப்புவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா 500 கோடி ரூபாய் ஒதுக்கி ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணையின்படி பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கப்படுவதுடன் வெள்ளச் சீரமைப்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளச் சேத நிவாரணம் மற்றும் சீரமைப்புகளுக்கான தேவை முதற்கட்டமாக 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது - இத்தொகை மாநில அரசுக்கு வழங்கப்படவேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பாரதப் பிரதமருக்கு இன்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும், பிரதமரை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கடிதமும், வெள்ளச் சேத அறிக்கையும் பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசு உடனடி நிதி உதவியாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், வெள்ளச் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க விரைவில் மத்திய ஆய்வுக் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00