முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தொற்றுநோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு : அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு - முன்னேற்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Oct 9 2015 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகத்தில் தொற்றுநோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக, கொசுக்களை ஒழிப்பது உள்ளிட்ட 17 முக்கிய நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காலத்தின்போது, தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம், தொற்றுநோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்றுநோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது.

அமைச்சர் திரு. S.P. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி மண்டல இயக்குநர்கள், பேரூாட்சி உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சுகாதாரமான குடிநீரை அன்றாடம் விநியோகம் செய்ய வேண்டும் - தொற்றுநோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 முக்கிய அறிவுரைகள், அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

இதனிடையே, நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையில் தொற்றுநோய் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொற்றுநோய் தடுப்பு குறித்த முன்னேற்பாடுகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00