வெற்று விளம்பரத்திற்காக ஊர் சுற்றும் ஸ்டாலின், உதகையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சம்பவம் - அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் - பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

Oct 9 2015 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் வெற்று விளம்பரத்திற்காக ஸ்டாலின் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தில் மற்றொரு அராஜக சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாகன ஓட்டிகளுடன் தகராறு செய்ததோடு, அ.இ.அ.தி.மு.க.வின் சுவரொட்டிகளையும் கிழித்து தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்திற்கு அப்பகுதி மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதற்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோ ஓட்டுநர்கள், ஸ்டாலினுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கருணாநிதி குடும்பத்திற்குள் குடுமிப்பிடி சண்டை வலுத்து வருவதாலும், தி.மு.க.வுக்குள் மீண்டும் கோஷ்டி பூசல்கள் அதிகரித்திருப்பதாலும், பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இந்தப் பயணத்தின்போது, தனக்கே உரித்தான ஆணவப் போக்குடன் அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை ஸ்டாலின் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஏற்கெனவே இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், நேற்று மாலை ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்தபோது, அவரது கட்சித் தொண்டர்கள் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறு செய்தனர். வாகனங்களின் சாவிகளை பறித்ததோடு, ஓட்டுநர்களுடன் தகராறிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதுமட்டுமின்றி, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பேனர்களையும் தி.மு.க.வினர் கிழித்தெறிந்து அராஜகம் செய்தனர். அக்கட்சியினரின் இச்செயலுக்கு பொள்ளாச்சிப் பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்தபோது, ஆட்டோ ஓட்டுநரை ஸ்டாலின் தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் வலுத்து வருகிறது. அங்கு கண்டனப் பேரணி நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள், ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர். மு.க. ஸ்டாலினின் இச்செயலுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஸ்டாலின் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என திருவள்ளூர் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00