கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாம்பு கடித்து உயிரிழந்த இருவரின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு

Oct 9 2015 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், பாம்பு கடித்து 2 பேர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், காரணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு. பாலமுருகன் என்பவரின் மகள் செல்வி பாலஸ்ரீ, கடந்த ஜுன் மாதம் 2-ம் தேதி, காரணப்பட்டு அங்கன்வாடி அருகே பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. தாண்டவமூர்த்தி என்பவரின் மகன் குணசேகரன், கடந்த ஜுன் மாதம் 18-ம் தேதி, வயல்வெளியில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், பாம்பு கடித்து உயிரிழந்த பாலஸ்ரீ மற்றும் குணசேகரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00