திருச்சியில் நடைபெற்ற சர்வதேச பேக்கரி தினம் : விதவிதமான ரொட்டி ரகங்களை பார்த்து மகிழும் பார்வையாளர்கள்

Oct 9 2015 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் பேக்கரி தினத்தை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதனை பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

கடந்த 19ம் நூற்றாண்டு முதல், கோதுமை அறுவடை முடிவுற்றதை ஐரோப்பியர்கள் ஆண்டுதோறும் பேக்கரி தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளையொட்டி, பல்வேறு சுவைகளில் விதவிதமான வடிவங்களில் ரொட்டிகளைத் தயாரித்து, ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள். இந்த பேக்கரி தினம் தமிழகத்திலும் ஆங்காகே கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சியில், ஒரு தனியார் சமயற்கலை கல்லூரி சார்பில் 20வது ஆண்டாக ரொட்டி கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி நேற்று தொடங்கியது. அங்கு வண்ணத்துப்பூச்சி, குருவி, நட்சத்திரமீன், இயற்கை காட்சிகள் போன்ற பல்வேறு வடிவங்களில் ரொட்டிகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை பலரும் ஆர்வமுடன் கண்டுகளிக்கின்றர். கோதுமையில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றில் உள்ள சத்துக்கள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஒரு விழிப்புணர்வு அடிப்படையில் இக்கண்காட்சி நடத்தப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சி திருச்சி பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00