முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

Oct 9 2015 10:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாதனை விளக்க பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க.வே அமோக வெற்றிபெறும் என்பதை உணர்ந்த தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விரக்தியில் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குடும்ப பிரச்னையால் தி.மு.க. வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், ஸ்டாலின் நகைச்சுவை நடைபயணம் மேற்கொண்டுள்ளதாகவும் கழக பேச்சாளர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில், அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில், திருநின்றவூர் பகுதியில் கழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அமைச்சர் திரு. எஸ். அப்துல் ரஹீம், மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மணலி புதுநகர் பகுதியில் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குழு தலைவர் டாக்டர் P. வேணுகோபால், சட்டமன்ற உறுப்பினர், தலைமைக் கழக பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்திவரும் சாதனை திட்டங்களை எடுத்துரைத்தனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக மகளிரணி சார்பில், மதுராந்தகத்தை அடுத்த நல்லாமூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00