முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

Oct 9 2015 8:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட என்.எஸ்.பி. சாலையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பேருந்து நிழற்குடையை அரசுத் தலைமைக்கொறடா திரு.ஆர்.மனோகரன் திறந்துவைத்தார். தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையில், நவீன சோலார் விளக்கு வசதிகளுடன் கூடிய இந்த நிழற்குடை திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் 9 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 663 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா திரு.ஆர்.மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டம் கும்பினிப்பேட்டை, நீலகண்டராயன்பேட்டை, லாலாபேட்டை ஆகிய இடங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்த 302 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருத்தணி கோ.அரி, சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வார்டிலும் பூச்சி மருந்துகள் அடிக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், வீடுவீடாக பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. இப்பணிகளை மாநகராட்சி மேயர் திருமதி.கார்த்தியாயினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00