பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே அரசு சிமெண்ட் விற்பனை - அதிக விலைக்கு விற்கப்படுவதாக, ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் தமிழக அரசு கண்டனம்

Oct 9 2015 8:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே சிமெண்ட் விற்பனை செய்து வருவதாகவும், மூட்டை ஒன்று 330 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மூட்டை ஒன்று 380 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுவதாக The Hindu நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், கடந்த காலங்களைப் போன்று தற்போதும் பொதுமக்களுக்கு குறைந்த விலையிலேயே சிமெண்ட் விற்பனை செய்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு சிமெண்ட் P.P.C விலை 303 ரூபாயாகவும், வாடகை சேர்த்து அடக்க விலை 330 ரூபாயாகவும் உள்ளது - அரசு சிமெண்ட் O.P.C விலை 315 ரூபாயாகவும், வாடகை சேர்த்து அடக்க விலை 340 ரூபாயாகவும் உள்ளது. இவை இரண்டும் அரியலூர் சிமெண்ட் ஆலையில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் இருந்து அரசு சிமெண்ட் மூட்டை ஒன்று P.P.C 317 ரூபாய்க்கும், வாடகை சேர்த்து 335 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக இந்த விலைதான் நடைமுறையில் இருந்து வருகிறது - அரசு சிமெண்ட் விலை அண்டை மாநிலங்களின் சிமெண்ட் விலைகளோடு ஒப்பிடும்போதும், தனியார் நிறுவனங்களின் விலைகளோடு ஒப்பிடும்போதும் பொதுமக்களுக்கு முகவர்கள் மூலமாக குறைந்த விலையிலேயே அரசு சிமெண்ட் விற்கப்பட்டு வருகிறது.

எனவே P.P.C அரசு சிமெண்ட் மூட்டை ஒன்று 380 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுவதாக, 08.10.2015-ம் தேதியிட்ட The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அரசு சிமெண்ட் தென் மாவட்டங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவகிறது - கடந்த பல ஆண்டுகளாக அரசு சிமெண்ட் சென்னை மாநகரத்தில் விற்பனை செய்யப்படவில்லை - எனவே அரசு சிமெண்ட் P.P.C மூட்டை ஒன்று 380 ரூபாய் என்ற விலையில் சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்தியும் தவறான மற்றும் ஆதாரமற்ற செய்தி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அம்மா சிமெண்ட் விற்பனை திட்டத்தின் மூலம் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள பொதுமக்களுக்கு அவர்கள் வீடு கட்டவும் மற்றும் வீடு பழுது பார்க்கவும், சிமெண்ட் மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது - இத்திட்டத்தின் மூலம், இந்த சிமெண்ட் மூட்டைகள் இதுவரை 7 லட்சத்து 95 ஆயிரத்து 565 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 927 பயனாளிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00