கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் குறித்து தவறான அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொழிலாளர் நல வாரியம் கடும் கண்டனம்

Oct 9 2015 7:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் குறித்து தவறான அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, தொழிலாளர் நல வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வாரியத்தையே அழிக்க நினைத்த கருணாநிதிக்கு, வாரியம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் தொழிலாளர்களின் வாக்கைப் பெறுவதற்கு கருணாநிதி தவறான அறிக்கை வெளியிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் என்னாச்சு? என வாரியத்தைப் பற்றி தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1982 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தைத் தடுத்து, வாரியத்திற்கு நிதி ஒதுக்காமல் 17 வாரியங்களாக பிரித்து, பணப்பயன் வழங்காமல் விட்டுச் சென்றது - 2006 ஆம் ஆண்டு தொழிலாளர்களின் பங்களிப்பை ரத்து செய்து, தொழிலாளர்களின் உரிமைகளையும், தொழிற்சங்களின் உரிமைகளையும் பறித்து, தொழிற்சங்கத்தை அறவே நீக்கி இலவச பதிவு, புதுப்பித்தல் என்று கூறி, VAO மூலம் கையெழுத்து சரிபார்ப்புச் சான்றிதழை பெறச் செய்ய வருவாய் துறையில் விசாரணைக்கு அனுப்பி தொழிலாளர்கள் நேரில் மனுக்களை அளிக்க வேண்டும் என்று அலைக்கழித்தது என வாரியத்தை அழிக்க நினைத்த கருணாநிதிக்கு வாரியம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் தொழிலாளர்களின் வாக்கைப் பெறுவதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தவறான அறிக்கை வெளியிட்டு வருவதாகவும் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் குற்றம்சாட்டியுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், நடைமுறை சிக்கலை ஆராய்ந்து, தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு அளிக்க தொலைதூரத்திலிருந்து சிரமப்பட்டு வருவதைத் தவிர்க்கும் வகையில் இணையதளத்தின் மூலம் பெற வழிவகை செய்ய சட்டமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது - இந்தியாவிலேயே வாரியப் பணியில் தமிழகம் முதலிடமாக திகழ்ந்து வருகிறது - கட்டுமான பணியின்போது, விபத்தில் தொழிலாளர்கள் இறப்பு நேர்ந்தால் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக முதலமைச்சர் உயர்த்தியுள்ளார். பென்ஷன் உதவித் தொகை 500-லிருந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாயும், தெருவோரத்தில் தங்கும் தொழிலாளர்களுக்கு இருப்பிட வசதியும், ஏழைகளின் பசியைப் போக்க அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், கட்டிட தொழிலாளர்களின் பணி இடத்திலேயே ஆம்புலன்ஸ் வசதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, மடிக்கணினி என அனைத்தையும் வழங்கி, தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் என்றும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் புகழாரம் சூட்டியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00