வெனிசுவேலா, ஃபிரான்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக, சென்னை வாள்வீச்சு வீராங்கனைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

Oct 9 2015 7:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை, வெனிசுவேலா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் இம்மாதம் நடைபெறவுள்ள வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இந்த வாள்வீச்சுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லவும் வீராங்கனைக்கு முதலமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் உயரிய நோக்கில், தமிழ்நாட்டில் பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை உயர்த்தியது போன்ற எண்ணற்ற திட்டங்களை தமது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை செல்வி சி.ஏ. பவானி தேவி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதோடு, இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் - இதுமட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார் - தற்போது செல்வி சி.ஏ. பவானி தேவி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், செல்வி சி.ஏ. பவானி தேவி இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்கிட வேண்டுமென்று தமக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார் - அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் செல்வி சி.ஏ. பவானி தேவி கலந்து கொள்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும், செல்வி சி.ஏ. பவானி தேவி, வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.



பவானி தேவி நன்றி

சர்வதேச வாள்வீச்சு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை செல்வி சி.ஏ. பவானி தேவி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இணையதளம் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின், இந்த அறிவிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். நிதியுதவி வழங்கி தனக்கு ஆதரவும், ஊக்கமும் வழங்கிய முதலமைச்சருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிதிபிரச்னை காரணமாக ஏற்கெனவே பல முக்கியமான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதாகவும், இதனால் சர்வதேச தரப்பட்டியிலில் தனக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள பவானி, இந்த ஆண்டு பல முக்கிய போட்டிகளில் தான் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்த்துகள் மற்றும் ஆதரவோடு வரும் போட்டிகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த இருப்பதாகவும் பவானி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00