ஸ்மார்ட் சிட்டீஸ் எனப்படும் சீர்மிகு நகரங்களுக்கான சேவையை சிறந்த முறையில் வழங்குவது தொடர்பான பயிலரங்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்றது

Oct 8 2015 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்மார்ட் சிட்டீஸ் எனப்படும் சீர்மிகு நகரங்களுக்கான சேவையை சிறந்த முறையில் வழங்குவது தொடர்பான பயிலரங்கு, சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை திகழச்செய்ய தொலைநோக்குடன் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்ட "தொலைநோக்கு திட்டம் - 2023", மாநிலத்தில் 10 நகரங்களை உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த வகை செய்வதாக பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார்.

நகரங்களில் சிறந்த சேவைக்கான சீர்மிகு தீர்வுகள் என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்று வரும் பயிலரங்கில் துவக்க உரையாற்றிய அமைச்சர் திரு. S.P. வேலுமணி, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, நகர்ப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அதனைச் சார்ந்த புறநகர் பகுதிகளுக்காக "சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம்" மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்கும் "ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்" ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இவற்றின் வாயிலாக குடிநீர் வழங்கல், சாலைகள், கழிவுநீர் வடிகால் மற்றும் சுகாதாரப் பணிகள், தெரு விளக்குள், திடக்கழிவு மேலாண்மை, பேருந்து நிலையங்கள் மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைமுறையில் உள்ள திட்டங்களுடன், ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 4 ஆண்டுகளில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும் முதலமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருவதாக அமைச்சர் திரு. வேலுமணி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிற்குதான் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 சீர்மிகு நகரங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் திரு. வேலுமணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு. பனீந்திரரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. விக்ரம் கபூர், நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு. பிரகாஷ், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் ஸ்வர்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00