முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் அனைவருக்கும் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டது

Aug 31 2015 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற, சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டது.

நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு கிடைத்துவரும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் வகையில், முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அறிமுகப்படுத்திய, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். மேலும், மாவட்டந்தோறும் இந்தத் திட்டத்தின்கீழ் நடைபெறும் கட்டணமில்லா மருத்துவ முகாமில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயர்தர சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் அம்மாபட்டியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள், அதிநவீன கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. நோய் அறிகுறி கண்டறியப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை வழங்கினர். மேலும் விலையில்லா மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்கள், கட்டணமில்லா மருத்துவ முகாமை நடத்த உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00